TNPSC Current Affairs 26 October 2026 – Daily Current Affairs in English & Tamil

நடப்பு நிகழ்வுகள் – 26 அக்டோபர் 2026 | தினமணி, The Hindu, PIB

By Vijayakumar IAS Academy, Chennai | Published: | Sources: Dinamani, The Hindu, PIB, India Today | Useful for TNPSC Group 1, 2, 2A, 4 and UPSC Prelims

TNPSC current affairs for 26 October 2026 covers Cyclone Arnab, Constitution Articles 261–265, the Rs. 84,084 crore Samudra Manthan scheme, the College Campus Tour 2026-27 scheme, the Maruthu Pandiyar brothers’ memorial, the Oskar Klein Medal for Ashoke Sen, an incentive for para-badminton player Thulasimathi Murugesan and the demise of Chef Damu – all in English and Tamil with exam-based model questions and answers.

Quick Answers – 26 October 2026 at a Glance

  • Cyclone Arnab: named by Bangladesh; “Arnab” means “ocean” in Bengali (WMO list, North Indian Ocean).
  • Articles 261–265: public acts and records (261), inter-State river disputes (262), Inter-State Council (263), interpretation (264), no tax without law (265).
  • Samudra Manthan: Rs. 84,084 crore deep-sea oil and gas exploration scheme, till 2030–31.
  • College Campus Tour 2026-27: 1,47,631 government school students, 741 colleges, 38 districts.
  • Maruthu Pandiyar brothers: executed on 24 October 1801 at Tirupputhur Fort.
  • Ashoke Sen: first Indian physicist to receive the Oskar Klein Medal.
  • Thulasimathi Murugesan: Rs. 1.25 crore incentive; Asian Para Games gold and silver.
  • Chef Damu (72): passed away on 25 October; Guinness record 2010, Padma Shri 2025.

சுருக்கமாக – 26 அக்டோபர் 2026

  • புயல் அர்னாப்: பெயரை வழங்கியது வங்காளதேசம்; வங்காள மொழியில் “பெருங்கடல்” என்று பொருள்.
  • சரத்து 261–265: பொதுச் செயல்கள் (261), நதிநீர் தகராறுகள் (262), மாநிலங்களுக்கு இடையேயான குழு (263), விளக்கம் (264), சட்டமின்றி வரி இல்லை (265).
  • சமுத்திர மந்தன்: ரூ.84,084 கோடி ஆழ்கடல் எண்ணெய்–எரிவாயு ஆய்வுத் திட்டம்; 2030–31 வரை.
  • கல்லூரி களப் பயணம் 2026-27: 1,47,631 அரசுப் பள்ளி மாணவர்கள், 741 கல்லூரிகள், 38 மாவட்டங்கள்.
  • மருது சகோதரர்கள்: 1801 அக்டோபர் 24 அன்று திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.
  • அசோக் சென்: ஆஸ்கர் கிளைன் பதக்கம் பெறும் முதல் இந்திய இயற்பியலாளர்.
  • துளசிமதி முருகேசன்: ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை; ஆசிய பாரா போட்டிகளில் தங்கம், வெள்ளி.
  • செஃப் தாமு (72): அக்டோபர் 25 அன்று காலமானார்; 2010 கின்னஸ் சாதனை, 2025 பத்மஸ்ரீ.

Watch the Video – TNPSC Current Affairs 26 October 2026

வீடியோவைப் பாருங்கள் – நடப்பு நிகழ்வுகள் 26 அக்டோபர் 2026

Thirukkural of the Day – Kural 136

இன்றைய குறள் – குறள் 136

Kural No. 136 | Chapter: Ozhukkam Udaimai (Possessing Right Conduct)

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

Meaning: Persons of strong mind, who clearly know that a lapse in conduct brings blame and disgrace, never slip from righteous conduct.

குறள் எண்: 136 | அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

பொருள்: ஒழுக்கம் தவறுதலால் குற்றம் (மற்றும் இழிவு) உண்டாவதை நன்கு உணர்ந்துள்ள மனவலிமை உடைய சான்றோர், நல்லொழுக்கத்தில் எப்போதுமே தவற மாட்டார்கள்.

UNIT II – GEOGRAPHY OF INDIA | அலகு II – இந்தியாவின் புவியியல்

Cyclone Arnab: Who Named It and What Does Arnab Mean?

புயல் அர்னாப் – பெயரை வழங்கியது யார்? பொருள் என்ன?

Quick answer: The name Arnab was provided by Bangladesh. In Bengali, Arnab means “ocean”.

The name belongs to a pre-approved rotating list managed by the World Meteorological Organization (WMO) for the North Indian Ocean region.

Source: India Today

சுருக்கமாக: அர்னாப் என்ற பெயரை வழங்கியது வங்காளதேசம். வங்காள மொழியில் அர்னாப் என்றால் “பெருங்கடல்” (ocean) என்று பொருள்.

இப்பெயர் உலக வானிலை அமைப்பு (WMO) பராமரிக்கும் முன் அனுமதியளிக்கப்பட்ட சுழற்சிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Source: India Today

UNIT IV – POLITY | அலகு IV – இந்திய ஆட்சியியல்

Articles 261 to 265 of the Indian Constitution Explained

இந்திய அரசியலமைப்பு – சரத்து 261 முதல் 265 வரை

Quick answer: Articles 261–265 deal with public acts and records (261), inter-State river water disputes (262), the Inter-State Council (263), interpretation (264) and the rule that no tax can be imposed without authority of law (265).

Source: Laxmikanth Polity

சுருக்கமாக: சரத்து 261–265 பொதுச் செயல்கள் மற்றும் பதிவுகள் (261), நதிநீர் தகராறுகள் (262), மாநிலங்களுக்கு இடையேயான குழு (263), விளக்கம் (264), சட்டத்தின் அதிகாரமின்றி வரி விதிக்கக்கூடாது (265) ஆகியவற்றைப் பற்றியவை.

Source: Laxmikanth Polity

Article / சரத்து Provision (English) விதி (தமிழ்)
261 Public acts, records and judicial proceedings பொதுச் செயல்கள், பதிவுகள் மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள்
262 Adjudication of disputes relating to waters of inter-State rivers or river valleys இடைநில மாநில நதிகள் அல்லது நதிப் பள்ளத்தாக்குகள் நீர்கள் தொடர்பான தகராறுகளைத் தீர்ப்பது
263 Provisions with respect to an Inter-State Council (co-ordination between States) மாநிலங்களுக்கு இடையேயான குழு
264 Interpretation விளக்கம்
265 Taxes not to be imposed save by authority of law சட்டத்தின் அதிகாரமின்றி வரிகள் விதிக்கப்படக்கூடாது

UNIT V – INDIAN ECONOMY & DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU | அலகு V – இந்தியப் பொருளாதாரம்

Samudra Manthan Scheme: Rs. 84,084 Crore Deep-Sea Oil & Gas Exploration

ரூ.84,084 கோடி ‘சமுத்திர மந்தன்’ திட்டம்

The central government has released guidelines to search for oil and natural gas deep under the sea at a cost of Rs. 84,084 crore. Approved by the Union Cabinet chaired by Prime Minister Modi in July, this is India’s largest offshore oil and natural gas exploration project.

The project will be implemented through the 2030–31 financial year and is expected to add oil and gas energy equivalent to more than 60 crore tonnes to India’s reserves. The central government will provide financial assistance for drilling 56 exploratory wells in deep and ultra-deep waters and 4 geological wells.

Regions with water depths above 400 metres are classified as deepwater, and above 1,500 metres as ultra-deepwater.

Source: Dinamani, PIB

கடலுக்கு அடியில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேட ரூ.84,084 கோடி செலவில் சமுத்திர மந்தன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலையில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல் பெற்ற இது, இந்தியாவின் மிகப்பெரிய கடல்சார் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் திட்டமாகும்.

இத்திட்டம் 2030-31-ஆம் நிதி ஆண்டு வரை செயல்படுத்தப்படும். இதன் மூலம் 60 கோடி டன்னுக்கும் அதிகமான எரிசக்திக்கு இணையாக எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பை சேர்க்க முடியும். ஆழ்கடல் மற்றும் மிகுந்த ஆழ்கடல் பகுதிகளில் 56 கிணறுகளுக்கும், புவியியல் ஆய்வுக்காக 4 கிணறுகளுக்கும் மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்.

கடல் ஆழம் 400 மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகள் ஆழ்கடலாகவும், 1,500 மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகள் மிகுந்த ஆழ்கடலாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Source: Dinamani, PIB

Key fact Detail முக்கிய தகவல் விவரம்
Outlay Rs. 84,084 crore திட்ட மதிப்பீடு ரூ.84,084 கோடி
Approved by Union Cabinet chaired by PM Modi (July) ஒப்புதல் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை (ஜூலை)
Implementation till FY 2030–31 செயல்படுத்தும் காலம் 2030–31 நிதி ஆண்டு வரை
Expected addition More than 60 crore tonnes oil and gas energy equivalent எதிர்பார்க்கப்படும் இருப்பு 60 கோடி டன்னுக்கும் அதிகமான எரிசக்திக்கு இணை
Wells funded 56 exploratory wells + 4 geological wells கிணறுகள் 56 ஆய்வுக் கிணறுகள் + 4 புவியியல் கிணறுகள்
Deepwater Water depth above 400 m ஆழ்கடல் கடல் ஆழம் 400 மீ-க்கு மேல்
Ultra-deepwater Water depth above 1,500 m மிகுந்த ஆழ்கடல் கடல் ஆழம் 1,500 மீ-க்கு மேல்

UNIT V – INDIAN ECONOMY & DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU | அலகு V

‘College Campus Tour 2026-27’ Scheme for Government School Students

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘கல்லூரி களப் பயணம்’ திட்டம்

School Education Minister Rajamohan launched the ‘College Campus Tour 2026-2027’ scheme in Chennai to help government school students pursue higher education. The state-level inauguration was held at the Anna University campus in Chennai.

The scheme aims to create awareness about higher education, provide direct exposure to college environments, and guide students based on their interests and skills.

Under this scheme, 1,47,631 students requiring special attention from government schools across 38 districts will be taken to visit 741 government and private colleges with the cooperation of the Higher Education Department.

Source: Dinamani

அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர ஏதுவாக ‘கல்லூரி களப் பயணம் 2026-2027’ திட்டத்தைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் சென்னையில் தொடங்கி வைத்தார். மாநில அளவிலான தொடக்க விழா சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

உயர் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கல்லூரிச் சூழலை நேரடியாக அறிமுகப்படுத்துவது மற்றும் மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறனுக்கு ஏற்ற உயர்கல்விப் பாதையைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் உள்ள 1,47,631 அரசுப் பள்ளி மாணவர்கள் 741 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

Source: Dinamani

Download Today’s Current Affairs PDF

இன்றைய நடப்பு நிகழ்வுகள் PDF பதிவிறக்கம்

Get the complete 26 October 2026 current affairs in English and Tamil, with model questions and answers, as a PDF for offline revision.

UNIT VI – HISTORY, CULTURE, HERITAGE & SOCIO-POLITICAL MOVEMENTS IN TAMIL NADU | அலகு VI

Maruthu Pandiyar Brothers: Vice President Pays Tribute on Death Anniversary

மருது சகோதரர்களுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் அஞ்சலி

Vice President C. P. Radhakrishnan paid floral tributes to the portraits of the Maruthu Pandiyar brothers on Saturday at the Vice President’s Enclave in New Delhi on their death anniversary.

Anniversary date: The execution / death anniversary is observed on October 24 (they were executed by the British East India Company at Tirupputhur Fort on October 24, 1801).

Historical significance: The Maruthu Pandiyar brothers (Periya Maruthu and Chinna Maruthu) were early freedom fighters and rulers of the Sivaganga kingdom who led the South Indian Rebellion of 1801 against British colonial rule.

Source: Dinamani

மருது சகோதரர்களின் நினைவுநாளையொட்டி, டெல்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் அவர்களது உருவப்படங்களுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினார்.

நினைவு நாள் (தேதி): மருது சகோதரர்களின் நினைவு நாள் அக்டோபர் 24 ஆகும் (1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று திருப்பத்தூர் கோட்டையில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்).

கூடுதல் வரலாற்றுத் தகவல்: மருது சகோதரர்கள் (பெரிய மருது மற்றும் சின்ன மருது) சிவங்கைச் சீமையின் ஆட்சியாளர்களாக இருந்து ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக 1801-ல் தென்னிந்தியப் புரட்சியைத் தலைமைதாங்கி நடத்தினர்.

Source: Dinamani

Miscellaneous Current Affairs – 26 October 2026

இதர நடப்பு நிகழ்வுகள்

MISCELLANEOUS | இதர நடப்பு நிகழ்வுகள்

Oskar Klein Medal 2026: Ashoke Sen Becomes First Indian Physicist Awardee

இந்திய இயற்பியலாளருக்கு உயரிய சர்வதேச விருது – ஆஸ்கர் கிளைன் பதக்கம்

Indian physicist Ashoke Sen has been awarded the prestigious Oskar Klein Medal, becoming the first Indian physicist to receive this honour.

Established in 1988 in memory of Swedish theoretical physicist Oskar Klein, the medal is awarded annually by Stockholm University and the Nobel Committee of the Royal Swedish Academy of Sciences. Prof. Sen delivered the Oskar Klein Memorial Lecture on October 22 at the AlbaNova University Center in Stockholm, Sweden, where he received the medal.

He is an honorary professor at the International Centre for Theoretical Sciences (ICTS) of TIFR in Bengaluru, renowned for his work on String Theory and research on black holes. Earlier honours: Padma Shri (2001), Fundamental Physics Breakthrough Prize (2012) and Padma Bhushan (2013).

Source: Dinamani

இந்திய இயற்பியலாளர் அசோக் சென் என்பவருக்கு உயரிய ‘ஆஸ்கர் கிளைன் பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளது; இவ்விருதைப் பெறும் முதல் இந்திய இயற்பியலாளர் இவராவார்.

சுவீடனின் கோட்பாட்டு இயற்பியலாளர் ஆஸ்கர் கிளைன் நினைவாக 1988-இல் நிறுவப்பட்ட இப்பதக்கம், ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் மற்றும் ராயல் சுவீடிஷ் அறிவியல் அகாதெமியின் நோபல் குழுவால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஸ்டாக்ஹோமில் உள்ள ஆல்பாநோவா பல்கலைக்கழக மையத்தில் அக்டோபர் 22-ஆம் தேதி சொற்பொழிவு ஆற்றிய பின் அவர் இப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.

பெங்களூரு ஐசிடிஎஸ் (ICTS) கௌரவ பேராசிரியரான இவர், நவீன சரம் கோட்பாடு (String Theory) மற்றும் கருந்துளை சார்ந்த ஆய்வுகளுக்காகப் புகழ்பெற்றவர். இவர் முன்னதாக 2001-இல் பத்மஸ்ரீ, 2012-இல் அடிப்படை இயற்பியல் திருப்புமுனைப் பரிசு, மற்றும் 2013-இல் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்றுள்ளார்.

Source: Dinamani

MISCELLANEOUS – SPORTS | இதர நடப்பு நிகழ்வுகள் – விளையாட்டு

Rs. 1.25 Crore Incentive for Para-Badminton Player Thulasimathi Murugesan

துளசிமதி முருகேசனுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை

Chief Minister Vijay announced a cash incentive of Rs. 1.25 crore for Tamil Nadu para-badminton player Thulasimathi Murugesan.

She won a gold medal in Women’s Doubles (SL3-SU5) and a silver medal in Mixed Doubles (SL3-SU5) at the Asian Para Games.

Source: Dinamani

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகப் பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இவர் ஆசிய பாரா போட்டிகளில் பெண்கள் இரட்டையர் (SL3-SU5) பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையர் (SL3-SU5) பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

Source: Dinamani

MISCELLANEOUS – PERSONALITIES | இதர நடப்பு நிகழ்வுகள் – ஆளுமைகள்

Chef Damu (Damodharan) Passes Away at 72

பிரபல சமையல் கலைஞர் ‘செஃப்’ தாமு (72) காலமானார்

Renowned culinary expert Damodharan, popularly known as ‘Chef Damu’ (72), passed away in Chennai on Sunday, October 25 due to ill health.

He created a Guinness World Record in 2010 by cooking 617 dishes continuously in 24 hours, 30 minutes and 12 seconds. Honouring his 40-year contribution to the culinary arts, the Central Government awarded him the Padma Shri in 2025.

Source: Dinamani

பிரபல சமையல் கலை நிபுணர் தாமோதரன் என்ற ‘செஃப்’ தாமு (72) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

2010-ஆம் ஆண்டில் 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் தொடர்ச்சியாக 617 வகையான உணவுகளைச் சமைத்து ‘கின்னஸ்’ உலக சாதனை படைத்தார். சமையல் கலையில் 40 ஆண்டுகால சேவையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 2025-ஆம் ஆண்டு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது.

Source: Dinamani

Save the PDF for Revision

திருப்புதலுக்கு PDF-ஐ சேமியுங்கள்

Download the PDF and practise the model questions that follow.

Exam-Based Model Questions with Answers – 26 October 2026

தேர்வு சார்ந்த மாதிரி வினாக்கள் – விடை மற்றும் விளக்கங்களுடன்

Question 1: Thirukkural – Statement Question

திருக்குறள் – கூற்று வினா

Consider the following statements regarding Thirukural Couplet 136:

  1. Persons of strong mind never slip from righteous conduct.
  2. They maintain virtue because they strictly fear losing their material wealth.

Which of the statements given above is/are correct?

A) 1 only
B) 2 only
C) Both 1 and 2
D) Neither 1 nor 2

திருக்குறள் 136-வது குறள் குறித்த பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

  1. மனவலிமை உடைய சான்றோர் நல்லொழுக்கத்தில் எப்போதுமே தவற மாட்டார்கள்.
  2. தங்களின் செல்வத்தை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தினாலேயே அவர்கள் ஒழுக்கத்தைப் பேணுகின்றனர்.

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?

A) 1 மட்டும்
B) 2 மட்டும்
C) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
D) இரண்டும் இல்லை

Show Answer & Explanation / விடை மற்றும் விளக்கம்

Answer: A

Statement 1 is correct. According to Couplet 136, men of strong mind never deviate from decorum/virtue. Statement 2 is incorrect because they avoid slipping from virtue knowing the disgrace/evil (ஏதம்) caused by the lapse of conduct, not due to fear of losing material wealth.

விடை: A
கூற்று 1 சரியானது. குறள் 136-ன் படி மனவலிமை உடைய சான்றோர் நல்லொழுக்கத்திலிருந்து எப்போதுமே தவற மாட்டார்கள். கூற்று 2 தவறானது, ஏனெனில் ஒழுக்கம் தவறுதலால் குற்றம் மற்றும் இழிவு உண்டாவதை நன்கு உணர்ந்துள்ளதாலேயே அவர்கள் தவற மாட்டார்களே தவிர, செல்வ இழப்பு அச்சத்தினால் அல்ல.

Question 2: Assertion & Reason

கூற்று மற்றும் காரணம்

Assertion (A): The tropical cyclone named ‘Arnab’ received a name that literally translates to ‘ocean’.

Reason (R): Bangladesh named Cyclone Arnab from the pre-approved rotating list managed by the World Meteorological Organization (WMO) for the North Indian Ocean region.

A) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
B) Both (A) and (R) are true but (R) is NOT the correct explanation of (A)
C) (A) is true but (R) is false
D) (A) is false but (R) is true

கூற்று (A): ‘அர்னாப்’ என்று பெயரிடப்பட்ட சூறாவளிப் புயலின் பெயருக்கு நேரடிப் பொருள் ‘பெருங்கடல்’ என்பதாகும்.

காரணம் (R): வட இந்திய பெருங்கடல் பகுதிக்கு உலக வானிலை அமைப்பு (WMO) பராமரிக்கும் சுழற்சிப் பட்டியலிலிருந்து அர்னாப் என்ற பெயரை வங்காளதேசம் வழங்கியது.

A) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமாகும்.
B) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல.
C) (A) சரி, ஆனால் (R) தவறு.
D) (A) தவறு, ஆனால் (R) சரி.

Show Answer & Explanation / விடை மற்றும் விளக்கம்

Answer: B

Both statements are individually correct. In Bengali, ‘Arnab’ means ocean. Bangladesh suggested the name from the WMO pre-approved list for the North Indian Ocean. However, statement (R) explains the procedure of naming, not why the Bengali word ‘Arnab’ means ocean.

விடை: B
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. வங்காள மொழியில் ‘அர்னாப்’ என்றால் பெருங்கடல் என்று பொருள். வட இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு WMO பராமரிக்கும் சுழற்சிப் பட்டியலிலிருந்து வங்காளதேசம் இப்பெயரை வழங்கியது. எனினும், R என்பது பெயர் வைக்கப்பட்ட நடைமுறையைக் கூறுகிறதே தவிர, அர்னாப் என்ற சொல்லுக்கு ஏன் பெருங்கடல் எனப் பொருள் வந்தது என்பதற்கான விளக்கமல்ல.

Question 3: Match the Following – Constitutional Articles

பொருத்துக – அரசியலமைப்புச் சரத்துகள்

Match List-I with List-II regarding Constitutional Articles:

List-I (Articles) List-II (Provisions)
a) Article 261 1. Adjudication of disputes relating to waters of inter-State rivers
b) Article 262 2. Taxes not to be imposed save by authority of law
c) Article 263 3. Public acts, records and judicial proceedings
d) Article 265 4. Provisions with respect to an Inter-State Council

A) a-3, b-1, c-4, d-2
B) a-1, b-3, c-2, d-4
C) a-3, b-4, c-1, d-2
D) a-4, b-1, c-3, d-2

பட்டியல்-I உடன் பட்டியல்-II ஐப் பொருத்துக:

பட்டியல்-I (சரத்துகள்) பட்டியல்-II (விதிகள்/கூறுகள்)
a) சரத்து 261 1. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீட்டுத் தகராறுகளைத் தீர்ப்பது
b) சரத்து 262 2. சட்டத்தின் அதிகாரமின்றி வரிகள் விதிக்கப்படக்கூடாது
c) சரத்து 263 3. பொதுச் செயல்கள், பதிவுகள் மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள்
d) சரத்து 265 4. மாநிலங்களுக்கு இடையேயான குழுவை அமைத்தல்

A) a-3, b-1, c-4, d-2
B) a-1, b-3, c-2, d-4
C) a-3, b-4, c-1, d-2
D) a-4, b-1, c-3, d-2

Show Answer & Explanation / விடை மற்றும் விளக்கம்

Answer: A

Article 261 deals with Public acts, records and judicial proceedings (3). Article 262 deals with Adjudication of inter-State river water disputes (1). Article 263 provides for Inter-State Council (4). Article 265 lays down that taxes cannot be imposed save by authority of law (2).

விடை: A
சரத்து 261 – பொதுச் செயல்கள், பதிவுகள் மற்றும் நீதித்துறை நடவடிக்கைகள் (3). சரத்து 262 – மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தகராறுகளைத் தீர்ப்பது (1). சரத்து 263 – மாநிலங்களுக்கு இடையேயான குழு (4). சரத்து 265 – சட்டத்தின் அதிகாரமின்றி வரிகள் விதிக்கப்படக்கூடாது (2).

Question 4: Correct Pair Identification

சரியான இணையைக் கண்டறிதல்

Which of the following pairs regarding recent Government Schemes and Parameters is/are correctly matched?

  1. Samudra Manthan Scheme – Financial assistance for offshore oil and gas exploration up to FY 2030-31
  2. Deepwater Classification – Ocean depth ranging between 100 meters and 300 meters
  3. College Campus Tour 2026-27 – Scheme targeting 1,47,631 government school students across 38 districts

A) 1 and 2 only
B) 1 and 3 only
C) 2 and 3 only
D) 1, 2 and 3

சமீபத்திய அரசுத் திட்டங்கள் மற்றும் அளவுகோல்கள் குறித்த பின்வரும் இணைகளில் எது/எவை சரியாகப் பொருந்தி உள்ளது?

  1. சமுத்திர மந்தன் திட்டம் – 2030-31 நிதி ஆண்டு வரை கடல்சார் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளுக்கான நிதியுதவி
  2. ஆழ்கடல் வகைப்பாடு – கடல் ஆழம் 100 மீட்டர் முதல் 300 மீட்டர் வரை உள்ள பகுதிகள்
  3. கல்லூரி களப் பயணம் 2026-27 – 38 மாவட்டங்களில் உள்ள 1,47,631 அரசுப் பள்ளி மாணவர்களை இலக்காகக் கொண்ட திட்டம்

A) 1 மற்றும் 2 மட்டும்
B) 1 மற்றும் 3 மட்டும்
C) 2 மற்றும் 3 மட்டும்
D) 1, 2 மற்றும் 3

Show Answer & Explanation / விடை மற்றும் விளக்கம்

Answer: B

Pair 1 is correct (Samudra Manthan is implemented till FY 2030-31 with Rs. 84,084 crore outlay). Pair 3 is correct (College Campus Tour scheme targets 1,47,631 government school students needing special attention across 38 districts visiting 741 colleges). Pair 2 is incorrect because deepwater is classified as depth above 400 meters (and ultra-deepwater above 1,500 meters).

விடை: B
இணை 1 சரி (சமுத்திர மந்தன் திட்டம் 2030-31 வரை ரூ.84,084 கோடியில் செயல்படுத்தப்படுகிறது). இணை 3 சரி (கல்லூரி களப் பயணம் திட்டம் 38 மாவட்டங்களில் உள்ள 1,47,631 அரசுப் பள்ளி மாணவர்களை 741 கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்வதை இலக்காகக் கொண்டது). இணை 2 தவறு, ஏனெனில் கடல் ஆழம் 400 மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகளே ஆழ்கடல் என்றும், 1,500 மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகள் மிகுந்த ஆழ்கடல் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Question 5: Statement Question – Maruthu Pandiyar Brothers

கூற்று வினா – மருது சகோதரர்கள்

Consider the following statements regarding the Maruthu Pandiyar Brothers:

  1. They were the rulers of the Sivaganga kingdom who spearheaded the South Indian Rebellion of 1801 against British colonial rule.
  2. The British East India Company executed both Periya Maruthu and Chinna Maruthu at the Tirupputhur Fort on October 24, 1801.

Which of the statements given above is/are correct?

A) 1 only
B) 2 only
C) Both 1 and 2
D) Neither 1 nor 2

மருது சகோதரர்கள் குறித்த பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

  1. அவர்கள் சிவகங்கைச் சீமையின் ஆட்சியாளர்களாக இருந்து ஆங்கிலேயக் கிழக் கிந்திய கம்பெனிக்கு எதிராக 1801-ல் தென்னிந்தியப் புரட்சியைத் தலைமைதாங்கி நடத்தினர்.
  2. ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியால் பெரிய மருது மற்றும் சின்ன மருது இருவரும் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?

A) 1 மட்டும்
B) 2 மட்டும்
C) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
D) இரண்டும் இல்லை

Show Answer & Explanation / விடை மற்றும் விளக்கம்

Answer: C

Both statements are correct. Periya Maruthu and Chinna Maruthu led the anti-colonial resistance in 1801 and were executed by the British at Tirupputhur Fort on October 24, 1801.

விடை: C
இரண்டு கூற்றுகளும் சரியானவை. பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய மருது சகோதரர்கள் 1801 தென்னிந்தியப் புரட்சியை சிவகங்கையிலிருந்து தலைமைதாங்கி நடத்தினர். அவர்கள் 1801 அக்டோபர் 24 அன்று ஆங்கிலேயரால் திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.

Question 6: Match the Following – Personalities & Honours

பொருத்துக – நபர்கள் மற்றும் கௌரவங்கள்

Match List-I (Personalities) with List-II (Achievements / Honours):

List-I (Personalities) List-II (Achievements / Honours)
a) Ashoke Sen 1. Asian Para Games Gold Medalist in Women’s Doubles Badminton (SL3-SU5)
b) Thulasimathi Murugesan 2. 2010 Guinness Record for cooking 617 dishes continuously in ~24.5 hours
c) Chef Damodharan (‘Chef Damu’) 3. Awarded annually by Stockholm University and Royal Swedish Academy Nobel Committee
d) Oskar Klein Medal 4. First Indian physicist to receive the prestigious Oskar Klein Medal for String Theory research

A) a-4, b-1, c-2, d-3
B) a-1, b-4, c-3, d-2
C) a-4, b-2, c-1, d-3
D) a-3, b-1, c-2, d-4

பட்டியல்-I (நபர்கள்) உடன் பட்டியல்-II (சாதனைகள் / கௌரவங்கள்) ஐப் பொருத்துக:

பட்டியல்-I (நபர்கள்) பட்டியல்-II (சாதனைகள் / கௌரவங்கள்)
a) அசோக் சென் 1. ஆசிய பாரா போட்டிகளில் பெண்கள் இரட்டையர் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்றவர்
b) துளசிமதி முருகேசன் 2. ~24.5 மணி நேரத்தில் 617 வகை உணவுகளைச் சமைத்து 2010-ல் கின்னஸ் சாதனை படைத்தவர்
c) செஃப் தாமோதரன் (‘செஃப் தாமு’) 3. ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் மற்றும் ராயல் சுவீடிஷ் அகாதெமி நோபல் குழுவால் வழங்கப்படுவது
d) ஆஸ்கர் கிளைன் பதக்கம் 4. நவீன சரம் கோட்பாட்டு ஆய்வுக்காக உயரிய ஆஸ்கர் கிளைன் பதக்கம் பெற்ற முதல் இந்திய இயற்பியலாளர்

A) a-4, b-1, c-2, d-3
B) a-1, b-4, c-3, d-2
C) a-4, b-2, c-1, d-3
D) a-3, b-1, c-2, d-4

Show Answer & Explanation / விடை மற்றும் விளக்கம்

Answer: A

Ashoke Sen is the first Indian physicist awarded the Oskar Klein Medal for String Theory (4). Thulasimathi Murugesan won Gold in Asian Para Games Women’s Doubles SL3-SU5 (1). Chef Damu set a Guinness record in 2010 cooking 617 dishes in 24h 30m 12s (2). The Oskar Klein Medal is awarded by Stockholm University & Nobel Committee (3).

விடை: A
அசோக் சென் – சரம் கோட்பாட்டு ஆய்வுக்காக ஆஸ்கர் கிளைன் பதக்கம் பெற்ற முதல் இந்திய இயற்பியலாளர் (4). துளசிமதி முருகேசன் – ஆசிய பாரா போட்டிகளில் பெண்கள் இரட்டையர் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்றவர் (1). செஃப் தாமு – 2010-ல் 617 உணவுகளைச் சமைத்து கின்னஸ் சாதனை படைத்தவர் (2). ஆஸ்கர் கிளைன் பதக்கம் – ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் & நோபல் குழுவால் அளிக்கப்படும் விருது (3).

Frequently Asked Questions – TNPSC Current Affairs 26 October 2026

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the meaning of Cyclone Arnab and who named it?

Cyclone Arnab was named by Bangladesh. In Bengali, Arnab means “ocean”. The name comes from the pre-approved rotating list managed by the World Meteorological Organization (WMO) for the North Indian Ocean region.

புயல் அர்னாப் என்ற பெயரை வழங்கியது வங்காளதேசம். வங்காள மொழியில் அர்னாப் என்றால் ‘பெருங்கடல்’ என்று பொருள். இது WMO பராமரிக்கும் முன் அனுமதியளிக்கப்பட்ட சுழற்சிப் பட்டியலில் உள்ள பெயர்.

What do Articles 261 to 265 of the Indian Constitution deal with?

Article 261: public acts, records and judicial proceedings. Article 262: adjudication of inter-State river water disputes. Article 263: Inter-State Council. Article 264: interpretation. Article 265: taxes not to be imposed save by authority of law.

சரத்து 261: பொதுச் செயல்கள், பதிவுகள், நீதித்துறை நடவடிக்கைகள். சரத்து 262: நதிநீர் தகராறுகளைத் தீர்ப்பது. சரத்து 263: மாநிலங்களுக்கு இடையேயான குழு. சரத்து 264: விளக்கம். சரத்து 265: சட்டத்தின் அதிகாரமின்றி வரிகள் விதிக்கப்படக்கூடாது.

What is the Samudra Manthan scheme?

Samudra Manthan is a Rs. 84,084 crore scheme to search for oil and natural gas deep under the sea. Approved by the Union Cabinet in July, it is India’s largest offshore oil and gas exploration project and will run through the 2030–31 financial year, with support for 56 exploratory wells and 4 geological wells.

சமுத்திர மந்தன் என்பது கடலுக்கு அடியில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேடும் ரூ.84,084 கோடி திட்டம். இது இந்தியாவின் மிகப்பெரிய கடல்சார் ஆய்வுத் திட்டம்; 2030-31 வரை செயல்படுத்தப்படும்; 56 ஆய்வுக் கிணறுகள் மற்றும் 4 புவியியல் கிணறுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

What is the College Campus Tour 2026-27 scheme?

It is a Tamil Nadu scheme launched by School Education Minister Rajamohan at Anna University, Chennai. It will take 1,47,631 government school students from 38 districts to 741 government and private colleges to create awareness about higher education.

இது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய திட்டம். 38 மாவட்டங்களின் 1,47,631 அரசுப் பள்ளி மாணவர்கள் 741 கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

When were the Maruthu Pandiyar brothers executed?

The Maruthu Pandiyar brothers (Periya Maruthu and Chinna Maruthu) were executed by the British East India Company at Tirupputhur Fort on 24 October 1801. They were rulers of the Sivaganga kingdom and led the South Indian Rebellion of 1801.

மருது சகோதரர்கள் (பெரிய மருது, சின்ன மருது) 1801 அக்டோபர் 24 அன்று திருப்பத்தூர் கோட்டையில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியால் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் சிவகங்கைச் சீமையின் ஆட்சியாளர்கள்; 1801 தென்னிந்தியப் புரட்சியை வழிநடத்தினர்.

Who is the first Indian physicist to receive the Oskar Klein Medal?

Ashoke Sen is the first Indian physicist to receive the Oskar Klein Medal. The medal, established in 1988, is awarded annually by Stockholm University and the Nobel Committee of the Royal Swedish Academy of Sciences.

ஆஸ்கர் கிளைன் பதக்கம் பெறும் முதல் இந்திய இயற்பியலாளர் அசோக் சென். 1988-இல் நிறுவப்பட்ட இப்பதக்கம் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் மற்றும் ராயல் சுவீடிஷ் அறிவியல் அகாதெமியின் நோபல் குழுவால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

How much incentive was announced for Thulasimathi Murugesan?

Chief Minister Vijay announced a cash incentive of Rs. 1.25 crore for para-badminton player Thulasimathi Murugesan, who won gold in Women’s Doubles (SL3-SU5) and silver in Mixed Doubles (SL3-SU5) at the Asian Para Games.

முதல்வர் விஜய், பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை அறிவித்தார். இவர் ஆசிய பாரா போட்டிகளில் பெண்கள் இரட்டையரில் தங்கமும் கலப்பு இரட்டையரில் வெள்ளியும் வென்றார்.

Who was Chef Damu and what was his Guinness record?

Chef Damu (Damodharan, 72) was a renowned culinary expert who passed away in Chennai on 25 October. In 2010 he set a Guinness World Record by cooking 617 dishes continuously in 24 hours, 30 minutes and 12 seconds, and received the Padma Shri in 2025.

செஃப் தாமு (தாமோதரன், 72) அக்டோபர் 25 அன்று சென்னையில் காலமானார். 2010-இல் 24 மணி 30 நிமிடம் 12 வினாடிகளில் 617 உணவுகளைச் சமைத்துக் கின்னஸ் சாதனை படைத்தார்; 2025-இல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

Copyright - Vijayakumar IAS Academy - Anitta Priyanka Balasubramanian - All Rights Reserved.
Designed & Developed by